மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 370 ரன்களை குவித்தது.
- இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது.
இந்தியா சார்பில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 73 ரன்களையும், மற்றொரு துவக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 67 ரன்களை அடித்தார். அடுத்து களமிறங்கிய ஹல்ரீன் தியோல் 89 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களை விளாசினார்.
இதையடுத்து 371 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய அயர்லாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனையான கேபி லூயிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் கேபி லீவிஸ் 12 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ்டினியா நிதானமாக ஆடி 80 ரன்களை சேர்த்தார்.
மற்ற வீராங்கனைகள் நிதானமாக ஆடிய போதிலும், 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பறியுள்ளது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி 80 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.