மகளிர் உலக கோப்பை: பாகிஸ்தான்- நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது
- மழையால் ஆட்டம் 36 ஓவராக குறைக்கப்பட்டது.
- 25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
50 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெறுகிறது.
கொழும்பில் இன்று பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின்போது மழை அவ்வப்போது குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் 36 ஓவராக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீடு செய்தது.
அதன்பின் மழை நிற்கவில்லை. 9.41 மணிக்கு மழை நின்றால் 20 ஓவர் போட்டியாக நடத்தலாம் என நடுவர்கள் அறிவித்தனர். ஆனால், மழை நிற்கவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் 4-ல் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை. இதன்மூலம் 9 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 4 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவு இல்லை. இதன்மூலம் 7 புள்ளிகள் மூலம் இங்கிலாந்து 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 4 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளன.