கிரிக்கெட் (Cricket)
TNPL: டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு
- முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.
- இரவு 7:15 மணிக்கு இரண்டாவது ஆட்டம் தொடங்கியது.
9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கோவையில் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது.
கோவையில் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று (ஜூன் 15) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.
இதையடுத்து, இன்று இரவு 7:15 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.