TNPL 2025: நெல்லையை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் வெற்றி
- சாத்விக் 41 ரன்களும், துஷார் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
- தொடக்க வீரர் சந்தோஷ் குமார் டக் அவுட்டானார்.
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக சாத்விக், துஷார் ரேஹஜா களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாத்விக் 41 ரன்களும், துஷார் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார்.
இதனால் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 183 ரன்கள் இலக்கை நோக்கி நெல்லை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர் சந்தோஷ் குமார் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அஜித்தேஷ் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அதிஷ், ரித்திக் ஈஸ்வரன் முறையே 17 ரன்களிலும், 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 19.4 ஓவர்களில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்றது.