கிரிக்கெட் (Cricket)
டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்
- கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய லைகா கோவை கிங்ஸ் 19.4 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கோவை அணியின் தொடக்க வீரர் ஜிதேந்திர குமார் 20 பந்தில் 42 ரன்கள் விளாசினார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார். பிரேம் குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.