கிரிக்கெட் (Cricket)
null

வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் வீரர் பாணியை பின்பற்றும் ரசிகசியத்தை உடைத்த ஸ்டீவன் சுமித்

Published On 2025-12-04 12:02 IST   |   Update On 2025-12-04 12:04:00 IST
  • ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார்.
  • வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கான பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.

அவரது பாணியை பின்பற்றும் சுமித்திடம் இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, 'சந்தர்பாலிடம் நான் குறுஞ்செய்தி அனுப்பி இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கண்ணுக்கு கீழ் பகுதியில் கருப்பு வர்ணம் இருக்கும் போது, கண்களை கூசும் வகையிலான ஒளி 65 சதவீதம் தடுக்கப்படுவதாக கூறினார். அது உண்மை தான் என்பதை பயிற்சியின் போது நானும் உணர்ந்தேன். மேலும் அவர் உங்களது புகைப்படங்களை பார்த்தேன். அதை தவறாக வரைந்துள்ளீர்கள் என்று கூறினார். இப்போது அதை சரி செய்து விட்டேன்' என்றார்.

Tags:    

Similar News