முதல் டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 19 ஓவரில் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பல்லேகலே:
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் 38 ரன்னும், மொகமது நயீம் 32 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 42 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த குசால் மெண்டிஸ்73 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது குசால் மெண்டிசுக்கு அளிக்கப்பட்டது.