கிரிக்கெட் (Cricket)

உலகின் முதல் வீராங்கனை.. சதத்தில் வரலாற்று சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா

Published On 2025-09-17 18:38 IST   |   Update On 2025-09-17 18:38:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார்.
  • அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார்.

அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மந்தனாவின் 3-வது ஒருநாள் சதமாகும்.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் பல சாதனைகளை மந்தனா படைத்துள்ளார். இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும். மேலும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த உலகின் முதல் வீராங்கை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். 2024-ம் ஆண்டில் அவர் நான்கு சதங்களையும் அடித்திருந்தார்.

அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். ஸ்மிரிதி மந்தனா 15 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 8 சதங்களுடன் மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது இடத்தில் உள்ளனர். மேலும் ஆசிய நாடுகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் 12 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் மந்தனா உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

அதிக சதம் அடித்த வீராங்கனைகள்:-

மெக் லானிங் - 17 சதங்கள்

ஸ்மிருதி மந்தனா - 15 சதங்கள்

சுசி பேட்ஸ் - 14 சதங்கள்

டாமி பியூமண்ட் - 14 சதங்கள்

சார்லோட் எட்வர்ட்ஸ் - 13 சதங்கள்

மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியல்:-

சூசி பேட்ஸ் - 12 சதங்கள்

ஸ்மிருதி மந்தனா- 12 சதங்கள்

டாமி பியூமாண்ட் - 12 சதங்கள்

Tags:    

Similar News