கிரிக்கெட் (Cricket)

7 மாதங்களுக்கு பிறகு ஷபாலி வர்மாவுக்கு இடம்- இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு

Published On 2025-05-15 20:46 IST   |   Update On 2025-05-15 20:46:00 IST
  • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.
  • ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

இந்திய மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. முன்னதாக இவர்கள் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

அதேசமயம் 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் ஷபாலி வர்மா இடம் பிடித்துள்ளார். அவர் டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்திய டி20 அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

இந்திய ஒருநாள் அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, சுச்சி உபாத்யாய், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே

Tags:    

Similar News