கிரிக்கெட் (Cricket)
null

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஸ்வான் - வைரல் வீடியோ

Published On 2025-09-30 10:53 IST   |   Update On 2025-09-30 11:04:00 IST
  • ஆசிய கோப்பை அணியில் ரிஸ்வானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
  • சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த ரிஸ்வான், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிபோட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர். தொடர் தோல்வி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. மேலும் அமெரிக்க லீக் போன்ற டி20 போன்ற தொடர்களில் விளையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கேப்டன் ரிஸ்வான் யாரும் எதிர்பார்க்காத வகையி்ல் உள்ளூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மைதானத்தை சுற்றி மக்கள் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது அவர் எப்போது விளையாடினார் என்பது குறித்த சரியான தகவல் ஏதும் இல்லை.

ஆனால் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிறைய ரசிகர்கள் எதிர்மறையான கருத்தும் சிலர் ஆதரவான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் ரிஸ்வான் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரிஸ்வான் 20-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News