ஓய்வுக்கு என்ன காரணம்.. டிராவிட் கேள்விக்கு மனம் திறந்த அஸ்வின்
- ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஓய்வுமுடிவு குறித்த ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.
என்று அஸ்வின் கூறினார்.