கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: இலங்கையை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்

Published On 2025-11-22 22:37 IST   |   Update On 2025-11-22 22:37:00 IST
  • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் அடித்தது.
  • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெனித் லியாங்கே 41 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 45 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முத்தரப்பு தொடரில் இலங்கை தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

Tags:    

Similar News