கிரிக்கெட் (Cricket)

முழங்காலில் காயம்: இங்கிலாந்து தொடரில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டி விலகல்?

Published On 2025-07-21 04:55 IST   |   Update On 2025-07-21 04:55:00 IST
  • மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
  • இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

மான்செஸ்டர்:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News