கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பை வென்றது நியூசிலாந்து

Published On 2025-07-27 00:23 IST   |   Update On 2025-07-27 00:23:00 IST
  • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180 ரன்கள் குவித்தது.
  • கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்னும், சைய்பட் 30 ரன்னும் எடுத்தனர்.

ஹராரே:

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்தது. லீக் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 47 ரன்னும், சைய்பட் 30 ரன்னும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரெடொரியஸ் அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 37 ரன்னும், டிவால்டு பிரேவிஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது மேட் ஹென்றிக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News