டி20 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நேபாளம்- ஓமன்: ஒரு இடத்துக்கு 4 அணிகள் போட்டி
- டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றனர்.
- நேபாளம்- ஓமன் 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த தகுதிச் சுற்றில் நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அவர்களது இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்பே 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன. மேலும் தகுதிச் சுற்றில் இன்னும் ஒரு இடம் மட்டுமே உள்ளது.
தற்போது ஓமனில் நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் யுஏஇ, ஜப்பான், கத்தார், சமோவா போன்ற அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி அணி தீர்மானிக்கப்படும். மீதமுள்ள ஒரு இடத்தை UAE அணி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, ஜிம்பாப்வே, நமீபியா, நேபாளம், ஓமன் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.