இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜை நீக்கவேண்டும்: மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தல்
- இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
- லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
பர்மிங்காம்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ் டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களே களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் முகமது சிராஜை நீக்கவேண்டும் என முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் சிராஜை இரண்டாவது டெஸ்டில் நீக்குவதுதான் சரியாக இருக்கும்.
முதல் டெஸ்டில் அவரைவிட பிரசித் கிருஷ்ணா நேர்த்தியாக பந்து வீசினார். இதனால் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்யலாம்.
இது கடினமான முடிவாக இருக்கும். தற்போதைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வேகப்பந்து வீரருக்கு பதிலாக குல்தீப் யாதவையும், ஷர்துல் தாக்குருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டியையும் சேர்க்கலாம் என தெரிவித்தார்.