கிரிக்கெட் (Cricket)
null

தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான்: பாகிஸ்தான் பயிற்சியாளர் பெருமிதம்

Published On 2025-09-12 14:14 IST   |   Update On 2025-09-12 14:14:00 IST
  • முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
  • ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.

எங்கள் அணியில் முகமது நவாஸ் இடம் பிடித்துள்ளார். தற்போதைய நிலையில் டி20 -யில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ்தான். அவர் அணிக்கு திரும்பியதில் இருந்து கடந்த 6 மாதங்களில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார் என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

முகமது நவாஸ் தற்போது ஐசிசி தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ளார். நாளைமறுதினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கார்.

31 வயதான முகமது நவாஸ் 71 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அணியில் அறிமுகம் ஆனார். யுஏஇ-யில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீ்ழ்த்தினார்.

Tags:    

Similar News