கிரிக்கெட் (Cricket)
டெஸ்டில் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான்: மார்க் வாக் புகழாரம்
- ஜெய்ஸ்வால் 28 டெஸ்ட் போட்டியில் 7 சதங்கள் அடித்துள்ளார்.
- சராசரி 49.23 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால். தற்போது இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 24 வயதான இடது கை தொடக்க பேட்டரான இவர், 28 போட்டிகளில் விளையாடி 53 இன்னிங்சில் 7 சதங்கள், 13 அரைசதங்களுடன் 2511 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 49.23 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க்வாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க் வாக் கூறியதாவது:-
இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். அவரது உயர்மட்ட நுட்பம், மன உறுதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பாராட்டத்தக்கது.
இவ்வாறு மார்க் வாக் தெரிவித்துள்ளார்.