கிரிக்கெட் (Cricket)

முதல் டெஸ்டின் கடைசி நாள்: ஜடேஜா பெரிய தொல்லையாக இருப்பார்- மைக்கேல் வாகன்

Published On 2025-06-24 16:35 IST   |   Update On 2025-06-24 16:35:00 IST
  • கடைசி நாள் 90 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும்.
  • அதற்கு காலையில் பும்ராவையும், மதியம் ஜடேஜாவையும் எதிர்த்து அவர்கள் நன்றாக விளையாட வேண்டும்.

லீட்ஸ்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன் எடுத்து பதிலடி கொடுத்தது. 6 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 364 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 371 ரன் இலக்காக இருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடைசி நாளில் இங்கிலாந்து அணிக்கு ஜடேஜா தொல்லையாக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' அட்டாக்கிங்கில் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கடைசி நாள் 90 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியும். அதற்கு காலையில் பும்ராவையும், மதியம் ஜடேஜாவையும் எதிர்த்து அவர்கள் நன்றாக விளையாட வேண்டும். இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜா நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களுக்கு பிரச்னையாக இருப்பார் என வாகன் கூறினார்.

Tags:    

Similar News