கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர்- வரலாறு படைத்த வில்லியம்சன்

Published On 2024-11-30 21:20 IST   |   Update On 2024-11-30 21:20:00 IST
  • அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில்அவுட் ஆனார்.
  • 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை வில்லியம்சன் கடந்தார்.

கிறிஸ்ட்சர்ச்:

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், ஸ்டோக்ஸ் 80 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 151 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3-வது நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்துள்ளது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில் வீழ்ந்தார்.

முன்னதாக வில்லியம்சன் இந்த 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் நியூசிலாந்து தரப்பில் 9000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

Tags:    

Similar News