கிரிக்கெட் (Cricket)
null

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ஜோ ரூட்டால் சச்சின் சாதனையை முறியடிக்கக் கூடும்- ரிக்கி பாண்டிங்

Published On 2025-07-25 21:04 IST   |   Update On 2025-07-25 22:03:00 IST
  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
  • சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள்தான் தேவை.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இது அவருடைய 38ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியில் சங்கக்கரா சாதனையுடன் இணைந்துள்ளார்.

மேலும், 120 ரன்களை தொட்டபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13379 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக 13378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் 2ஆவது இடத்தில் இருந்தார். அவரது சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடனும் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள் தேவை.

இந்த நிலையில் ஜோ ரூட்டால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

ஜோ ரூட்டின் வயது என்ன? 35 வயதுதான் ஆகிறது. பல வருடங்களாக அவரது ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அது அதிகரித்துக் கொண்டிருந்தது. அவரால் சச்சின் அடித்த ரன்னை விரட்ட முடியுமா? பார்ப்போம். அவர் அதைச் செய்யக்கூடும்.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஜோ ரூட்டுக்கு தற்போது 35 வயதாகிறது. குறைந்த பட்சம் 40 வயது வரை விளையாட வாய்ப்புள்ளது. இதே ஃபார்மில் இருந்தால் 2542 ரன்கள் சாத்தியமே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News