கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை

Published On 2025-11-11 13:09 IST   |   Update On 2025-11-11 13:09:00 IST
  • காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • காஷ்மீர் அணி 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜம்மூ காஷ்மீர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் தோசேஜா 65 ரன்கள் எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகுப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய காஷ்மீர் அணி 310 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பராஸ் டோக்ரா 106 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய டெல்லி அணி 277 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் காஷ்மீர் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து விளையாடிய காஷ்மீர் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக டெல்லி அணியை வீழ்த்தி ஜம்மூ காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.

Tags:    

Similar News