ஐ.பி.எல்.(IPL)

உலகின் மிகச்சிறந்த கீப்பர்.. தோனிக்கு முன்னாள் ஆஸி, வீரர் புகழாரம்

Published On 2025-04-15 14:44 IST   |   Update On 2025-04-15 14:44:00 IST
  • அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
  • தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை 19.3 ஓவரில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை மொத்தம் ஏழு போட்டிகளில் இரண்டாவது வெற்றியை சிஎஸ்கே பெற்று இருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகான சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனவும், அவரது கேப்டன்சி துல்லியமாக இருந்ததாகவும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தோனி எப்போது ஒரு நகரத்தில் இருந்தாலும் அங்கு மிகவும் சத்தமாக இருக்கும். அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர்.

தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது மிகவும் அற்புதமானது. இன்று அவரது கேப்டன்சியும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், ஓவர்களை வேகமாக வீசி முடித்தது அதன் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது.

இன்று நடந்த சிறந்த விஷயம் தோனியின் கேப்டன்சி தான். அவர் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டார். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்தார். அவரது சுழற் பந்துவீச்சாளர்களை வரிசையாக வீசவைத்தார். இதைத்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் செய்து இருக்கிறார். ஒரு கேப்டனாக இன்று இரவு களத்தில் தோனி செயல்பட்ட விதம்தான் இந்த போட்டியை நமக்கு சிறப்பாக விவரிக்கும்.

என்று மைக்கேல் கிளார்க் கூறினார்.

Tags:    

Similar News