ஐ.பி.எல்.(IPL)
IPL 2025: RR-க்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் RCB
- 2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது.
- பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன, இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.
இந்த தகவலை அந்த அணி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், எங்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.
2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.