ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 247 ரன்கள் குவிப்பு
- பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
- பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆடி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல் (31), ஸ்மிருதி மந்தனா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (32), தீப்தி சர்மா (25) ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தனர்
அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து அசத்தினார். ஹர்லீன் டில் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில், டயானா பெய்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் பாத்திமா சனா மற்றும் சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தானுக்கு 50 ஓவர்களில் 248 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.