கிரிக்கெட் (Cricket)

ENGvsIND மான்செஸ்டர் மைதானத்தில் கிளைவ் லாய்டு, பரூக் இன்ஜினீயர் பெயரில் ஸ்டேண்ட்..!

Published On 2025-07-23 17:18 IST   |   Update On 2025-07-23 17:18:00 IST
  • பரூக் இன்ஜினீயர் இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.

கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார்.

87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும்.

டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News