லார்ட்ஸ் டெஸ்ட்: சதத்தை நோக்கி கே.எல். ராகுல், ரன்அவுட் ஆன ரிஷப் பண்ட்- இந்தியா 248/4
- ரிஷப் பண்ட் 74 ரன்கள் விளாசினார்.
- கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் மந்தமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். நேரம் செல்ல செல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். ரிஷப் பண்ட் 86 பந்தில் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடியை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கே.எல். ராகுல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.
உணவு இடைவேளை வரை விக்கெட்டை இருவரும் காப்பாற்றிக் கொள்வார்கள் என நினைத்த நிலையில் பஷீர் விசிய ஓவரில் கஷ்டப்பட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்ய ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் 112 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். அத்துடன் 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கே.எல். ராகுல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கே.எல். ராகுல் சதம் அடித்து நீண்ட நேரம் விளையாடி ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு கொடுத்தால் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.