கிரிக்கெட் (Cricket)

ENGvsIND 5th Test மழை குறுக்கீடு: முன்னதாக விடப்பட்ட உணவு இடைவேளை- இந்தியா 72/2

Published On 2025-07-31 17:39 IST   |   Update On 2025-07-31 17:39:00 IST
  • சாய் சுதர்சன் 67 பந்தில் 25 ரன்கள் அடித்துள்ளார்.
  • சுப்மன் கில் 23 பந்தில் 15 ரன்கள் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் நேர்த்தியாக பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தனர். இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல்நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. சாய் சுதர்சன் 23 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News