கிரிக்கெட் (Cricket)

மழையால் கைவிடப்பட்ட 3வது போட்டி: சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து டி20 தொடர்

Published On 2025-09-14 22:26 IST   |   Update On 2025-09-14 22:26:00 IST
  • மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
  • ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நாட்டிங்காம்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுவதாக இருந்தது. அங்கு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருது பில் சால்டுக்கு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News