கிரிக்கெட் (Cricket)
null

மைதானத்திற்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள்- வைரல் வீடியோ

Published On 2025-06-03 20:24 IST   |   Update On 2025-06-03 21:38:00 IST
  • இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3-வது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.
  • இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

கார்டிப்:

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 2-0 என கணக்கில் தொடரை வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் 15 ஓவரில் 83 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கு இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கீட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. அது மழை காரணமாக அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மைதானத்திற்கு வரவில்லை.

போக்குவரத்து நெரிசலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேருந்து சிக்கிக்கொண்டது. அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியினரால் சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு வர முடியவில்லை என்பது தெரிய வந்தது.

ஆனால் போக்குவரத்து நெரிசலை முன்னரே அறிந்து கொண்ட இங்கிலாந்து அணியினர் தனித்தனியாக சைக்கிளில் மைதானத்திற்கு சரியான நேரத்தில் வந்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்ங்கள் மைதானத்திற்கு சைக்கிளில் வருகை தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News