கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் உடன் இந்தியா மோத வேண்டுமா? ஹர்பஜன் சிங் அளித்த பதில்..!

Published On 2025-09-12 14:35 IST   |   Update On 2025-09-12 14:35:00 IST
  • ஆபரேசன் சிந்தூருக்குப் பிறகு கிரிக்கெட், வணிகம் நடைபெறக் கூடாது எனச் சொல்கிறார்கள்.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளைமறுதினம்) துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடத்தப்பட வேண்டுமா? என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் போட்டியாக இருக்கும். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லோரும் கிரிக்கெட் மற்றும் வர்த்தகம் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறக்கூடாது எனச் சொல்கிறார்கள். நாம் லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினோம். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் புறக்கணித்தோம்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சிந்தனை மற்றும் புரிதல் முறை உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும்வரை, கிரிக்கெட் மற்றும் வணிகமும் நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கருத்து. அரசாங்கம் போட்டி நடக்கலாம் என்று சொன்னால், அது நடக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News