83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு.. விராட் கோலி போல சதத்தின் தாகத்தை தீர்த்த பாபர் அசாம்
- இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தார்.
- பாபர் அசாம் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்துள்ளார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஜெய்ந்த் லியானகே 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கமிந்து மெண்டீஸ் 44 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் ஆசம் சதம் அடித்தார். அவர் 102 ரன்னும் (8 பவுண்டரி), பகார் ஜமான் 78 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.
இந்த போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தன் மூலம் 807 நாட்கள் மற்றும் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார். இதே போல இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல போட்டிகளில் தடுமாறினார். அதன்பிறகு 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்தார். அதேபோல பாபர் அசாமும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.