கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் அதிக விக்கெட்டுகள்: வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்த ஸ்டார்க்

Published On 2025-12-04 11:22 IST   |   Update On 2025-12-04 11:22:00 IST
  • அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார்.
  • ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

பிரிஸ்பேன்:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 5 ரன்னில் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது.

2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (26) வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (19) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் (10) உள்ளனர்.

Tags:    

Similar News