கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடர்: 2-வது டெஸ்டிலும் இடம் பெறாத கம்மின்ஸ், ஹேசில்வுட்

Published On 2025-11-28 12:07 IST   |   Update On 2025-11-28 12:07:00 IST
  • ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
  • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நவம்பர் 29-ந் தேதி இங்கிலாந்து அணி 2 நாள் பயிற்சி போட்டியில் பிரதமர் லெவன் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வந்த இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை.

2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

Tags:    

Similar News