கிரிக்கெட் (Cricket)
null

இங்கிலாந்தின் இரட்டை நிலை: 4ஆவது டெஸ்ட் டிரா முடிவு சர்ச்சை குறித்து அஸ்வின் கருத்து..!

Published On 2025-07-28 18:28 IST   |   Update On 2025-07-28 18:30:00 IST
  • இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள்.
  • ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் டிராஃபோர்டில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி டிரா நோக்கி சென்று கொண்டிருந்தது. போட்டி முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும்போது ஜடேஜா 89 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களிலும் இருந்தனர்.

அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியை முடித்துக் கொள்ளலாம் எனக்கூறி ஜடேஜா உடன் கைக்குலுக்க விரும்பினார். ஆனால் ஜடேஜா மறுத்துவிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் அடித்த பின்னர், போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். முன்னணி வீரர்கள் காயம் அடைய வாய்ப்புள்ளதால், இந்த முடிவை எடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் முடிவால் விரக்தியடைந்தனர். இந்த நிலையில் டிரா விவகாரத்தில் இங்கிலாந்தின் செயலை இரட்டை நிலை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-

இரட்டை நிலை என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நாள் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார்கள். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பந்துகளை சந்தித்து ரன்கள் சேர்த்தனர். திடீரென அவர்கள் இருவரும் சதத்தை நெருங்கும்போது, நீங்கள் போட்டியை முடித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். அவர்கள் ஏன் அதை செய்ய வேண்டும்?.

இந்திய வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை காலையில் இருந்து எதிர்ககொண்டு, போட்டியை டிராவுக்கு எடுத்துச் சென்றனர். இருவரும் கடினமாக விளையாடியிருக்கிறார்கள். அப்படி விளையாடியவர்களை, சதம் அடிக்காமல் போகச் சொல்கிறீர்களா?.

நான் கேப்டனாக இருந்திருந்தால், 15 ஓவர் முழுமையாக விளையாட சொல்லியிருப்பேன். பென் ஸ்டோக்ஸ், ஜடேஜாவிடம் பார்ட்-டைம் பந்து வீச்சாளரான ஹார் ப்ரூக்கிற்கு எதிராக சேதம் அடிக்கப் போகிறீர்களா? என கிண்டலாக சொல்லியுள்ளார்.

அவர்கள் சதம் அடிக்க வேண்டும். நீங்கள் ஸ்டீவ் ஹார்மிசன், பிளின்டாப் உள்பட எந்த பந்து வீச்சாளரையும் கொண்டு வாருங்கள். அவர்கள் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஹாரி ப்ரூக்கை அழைத்தது நீங்கள். அவர்கள் அல்ல.

இவை டெஸ்ட் ரன்கள், ஒரு சதம் கணக்கில் சேர்கிறது. பரிசாக அல்ல, வாஷிங்டன் அதற்கு தகுதியானவர், ஜடேஜா அதற்கு தகுதியானவர்.

இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று நீங்கள் உங்கள் பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. சரி. இரண்டாவது நீங்கள் விரக்தியடைந்தீர்கள், 'நான் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது'. இப்போது கிரிக்கெட் இப்படித்தான் செயல்படுகிறது.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News