விளையாட்டு

U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ்: சிராக் சிக்காரா தங்கம் வென்றார்

Published On 2024-10-28 13:01 IST   |   Update On 2024-10-28 13:01:00 IST
  • தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.
  • -3 என கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கரசோவ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார்.

23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் அல்பேனியா நாட்டின் டிரனாவில் நடைபெற்றது.

இதில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சிராக் சிக்காரா 4-3 என கிர்கிஸ்தான் வீரர் அப்திமாலிக் கரசோவ்-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதன்மூலம் 23 வயதிற்கு உட்பட்டோருக்கு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் தங்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அமான் ஷெராவத், 2022-ம் ஆண்டு 23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

கடந்த வருடம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீதிகா ஹூடா தங்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைப் படைத்தார். 2018-ல் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Similar News