விளையாட்டு
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் சாம்பியன்
- அரையிறுதியில் தவான் வீரரை 17-21, 24-22, 21-15 என வீழ்த்தியிருந்தார்.
- இறுதிப் போட்டியில் 21-15, 21-11 என ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று மதியம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூஷி டனகாவை எதிர்கொண்டார்.
இதில் லக்ஷயா சென் 21-15, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்ஷயா சென் அரையிறுதியில் தைவானின் சூ டின்-சென்னை 17-21, 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.