விளையாட்டு
சென்னையில் நவம்பர் மாதம் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி
- இந்தோனேசியாவில் முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி பிறகு இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.
- நடிகர் ஆர்யா இந்த போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பங்கேற்கிறார்கள்.
இந்தோனேசியாவில் முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி பிறகு இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னையில் இந்த போட்டி நடக்கிறது. 3-வது முறையாக இந்தியா இப்போட்டியை நடத்துகிறது. நடிகர் ஆர்யா இந்த போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கண்ட தகவலை இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச்செயலாளர் டேவிட் பிரேம்நாத் , துணைத் தலைவர் எம்.சென்பகமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.