விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம்: பரிசாக அறிவித்த நிலத்தை வழங்கவில்லை- ஈட்டி எறிதல் வீரர் பாகிஸ்தான் அரசு மீது குற்றச்சாட்டு

Published On 2025-07-18 12:36 IST   |   Update On 2025-07-18 12:36:00 IST
  • பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 92.97 மீ தூரம் வீசி தங்கம் வென்றார்.
  • ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதையடுத்து நதீமுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசும் அவருக்கு பரிசுத்தொகை மற்றும் நிலம் வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அறிவித்த நிலம் வழங்கப்படவில்லை என்று அர்ஷத் நதீம் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்கள் என்பது உண்மைதான். எனக்கு நிலம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த வாக்குறுதிகள் போலியானவை. வாக்குறுதி அளித்தபடி எனக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆனால் மற்ற அனைத்து பரிசுகளும் எனக்கு வழங்கப்பட்டன என்றார்.

Tags:    

Similar News