விளையாட்டு
சி.எஸ்.கே வீரர் ராயுடு

இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர்- அறிவித்துவிட்டு பதிவை நீக்கிய கிரிக்கெட் வீரர்

Update: 2022-05-14 09:03 GMT
அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
மும்பை:

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் தான் விளையாடும் கடைசி தொடர் என டுவிட்டர் பதிவிட்டார். பின்பு சில நிமிடங்களிலேயே அந்த டுவீட்டை நீக்கிவிட்டார்.

அந்த டுவீட்டில் அவர் கூறியதாவது:-

இது தான் எனது கடைசி ஐபிஎல் தொடர் என மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். ஐபிஎல்லின் இரண்டு சிறந்த அணிகளில் 13 வருடமாக விளையாடியதை அற்புதமாக உணர்கிறேன். இந்த பயணத்தை வழங்கியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிகுக்கும் எனது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த டுவீட்டரி ரசிகர்கள் பகிர்ந்து வந்த நிலையில், உடனே டெலிட் செய்துவிட்டார். இதையடுத்து அவர் முடிவை மாற்றிவிட்டாரா அல்லது தொடர் முடிந்தபின் தனது ஓய்வை அறிவிப்பாரா என ரசிகர்கள் கேல்வி எழுப்பி வருகின்றனர்.

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அவர் இதுவரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,187 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 29.28-ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 127.26-ஆக உள்ளது. அவருடைய அதிகபட்ச ரன்களாக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.
Tags:    

Similar News