விளையாட்டு
சதமடித்த பானர்

பானர் அபார சதம் - மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 373/9

Published On 2022-03-11 04:51 IST   |   Update On 2022-03-11 04:51:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பானர் சதமடித்து அசத்தினார்.
ஆன்டிகுவா:

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ்  இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. பானர் 34 ரன்னும், ஹோல்டர் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், சிறப்பாக ஆடிய பானர் சதமடித்தார். அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. 

தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Similar News