விளையாட்டு
மாநில கைப்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த ஆத்தூர் அணிக்கு பாராட்டு
மாநில கைப்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த ஆத்தூர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
மாநில அளவில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மகளிர் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மகளிர் கைப்பந்து அணியினர் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து சேலத்தில் நடந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக புரவலர் ராஜ்குமாரை சந்தித்து மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.
அப்போது கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும், சிறந்த வீராங்கனையாக தேர்வான நிதிஷா என்ற மாணவிக்கும் மாற்ற மாணவிகளுக்கும் புரவலர் ராஜ்குமார் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக அசோசியேட் செயலாளர் சண்முகவேல், சாய் விளையாட்டு விடுதி முன்னாள் உதவி இயக்குனர் ராஜாராம், பயிற்சியாளர் பரமசிவன், நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.