விளையாட்டு
ஐ.எஸ்.எல் : ஈஸ்ட் பெங்கால் - நார்த் ஈஸ்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது
புள்ளிப் பட்டியலில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10-வது இடத்தில் உள்ளது.
கோவா:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர் மார்கோ சகாநெக், தமது அணி சார்பில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப் பட்டன. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் அணி கடைசியில் 11-வது இடத்திலும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10-வது இடத்திலும் உள்ளது.