விளையாட்டு
தங்கப்பதக்கத்துடன் நிஹாத், நித்து.

சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்

Published On 2022-02-28 09:41 IST   |   Update On 2022-02-28 09:49:00 IST
இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
சோபியா:

73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

எதிராளிக்கு சரமாரி குத்துகளை விட்ட மற்றொரு இந்திய வீராங்கனையும், முன்னாள் இளையோர் உலக சாம்பியனுமான நித்து (48 கிலோ பிரிவு) 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எரிக்கா பிரிஸ்சின்ட்ராவோவை பதம்பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

‘நான் ஏற்கனவே இங்கு தங்கம் வென்றுள்ளேன். அதனால் என்னை ‘ஸ்ட்ராண்ட்ஜாவின் ராணி’ என்று நீங்கள் அழைக்கலாம். இதனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று ஐதராபாத்தை சேர்ந்த 25 வயதான ஜரீன் குறிப்பிட்டார். இந்த தொடரை இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் முடித்துள்ளது.

Similar News