விளையாட்டு
ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூருவை வீழ்த்தியது மோகன் பகான்
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மோகன் பகான் அணிக்கு அதிகரித்துள்ளது
கோவா:
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.
மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிகளை நேரடியாக பார்வையிட
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி மற்றும் பெங்களூரு எப்.சி அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் லிஸ்டன் கோலகோ முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் 85 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் மன்விர் சிங் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டம் நிறைவு பெறும் வரை பெங்களூரு அணி ஒரு கோல் கூட அடிக்க வில்லை. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன் மூலம் அரையிறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு அந்த அணிக்கு
அதிகரித்துள்ளது.