விளையாட்டு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்திய அணியில் ஆவேஷ் கான் அறிமுகம்
இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆவேஷ் கான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.
கொல்கத்தா:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆவேஷ் கான் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோரும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹேடன் வால்ஷ், ஃபேபியன் ஆலன், டொமினிக் டிரேக்ஸ் மறறும் ஷாய் ஹோப் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.
இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாகர், ஷர்துல் தாகூர், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ்: கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பாவெல், கிரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், டொமினிக் டிரேக்ஸ், ஃபேபியன் ஆலன், ஹேடன் வால்ஷ்.