விளையாட்டு
ஷாருக்கான், பாபா அபராஜித் சதம் - முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 494 ரன்கள் குவித்தது
டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் ஷாருக்கான் 194 ரன்களில் ஆட்டமிழந்து 6 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
கவுகாத்தி:
ரஞ்சிக் கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தியில், தமிழ்நாடு, டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் ஆடிய டெல்லி அணி 141.2 ஓவர்கள் விளையாடி 452 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சிசை தொடங்கியது. 2-ம் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், முன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அணியில் ஷாருக் கான், பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.
ஷாருக்கான் அதிரடியாக ஆடி 194 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து 6 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். பாபா இந்திரஜித் 117 ரன்னில் அவுட்டானார். ஜெகதீசன் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தமிழ்நாடு அணி 494 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போதுவரை தமிழ்நாடு அணி டெல்லியை விட 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது.