விளையாட்டு
தெலுங்கு டைட்டன்ஸ், பிங்க் பாந்தர்ஸ் அணி வீரர்கள்

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

Published On 2022-02-17 05:27 IST   |   Update On 2022-02-17 05:27:00 IST
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. 

நேற்றிரவு  நடைபெற்ற  லீக் ஆட்டம் ஒன்றில் ஜெய்ப்பூர்  பிங்க் பாந்தர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் 54- 35 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்  பெங்கால் வாரியர்ஸ்,  தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இதில் 52-21 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 

தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 21 ஆட்டங்களில் 10 தோல்விகளை பெற்றுள்ளது. 

இன்றைய ஆட்டம் ஒன்றில் உ.பி.யோத்தா,  யு மும்பா அணியை எதிர் கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதுகின்றன.

Similar News