விளையாட்டு
அஸ்வின் - ஷிகர் தவான்

ஐபிஎல் 2022 - ஷிகர் தவான் 8.25 கோடிக்கும், அஸ்வின் 5 கோடிக்கும் ஏலம்

Published On 2022-02-12 12:35 IST   |   Update On 2022-02-12 13:01:00 IST
15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானை பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு வாங்கியது.
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். 

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது.

இதில் முதல் வீரராக ஷிகர் தவானை ஏலம் எடுத்தலில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு ஷிகர் தவனை ஏலம் எடுத்தது. அடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

Similar News