விளையாட்டு
விராட் கோலி

எனக்கு நான் எப்போதுமே கேப்டன்- விராட் கோலி சொல்கிறார்

Published On 2022-02-01 06:21 GMT   |   Update On 2022-02-01 06:21 GMT
நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார். அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

புதுடெல்லி:

விராட் கோலியின் 7 ஆண்டுகால கேப்டன் சகாப்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து அவர் முதலில் விலகினார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. யாரும் எதிர்பாராத வகையில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில் எனக்கு நான் எப்போதுமே கேப்டன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எந்த ஒன்றுக்குமே கால அவகாசம் இருக்கிறது. அதை நாம் எப்போதுமே உணர்ந்திருக்க வேண்டும். நாம் என்ன சாதித்து விட்டோம்? என்று மற்றவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் முன்னேற்றத்தையும், சாதனைகளையும் எட்டும் போது நாம் நமது வேலையை சரியாக செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரியவரும்.

தற்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக அணியின் வெற்றிக்கு அதிக பங்களிப்பு செய்ய முடியும். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்து வேன்.

எனக்கு அதில் கிடைக்கும் பெயர் போதுமானது. இதற்காக நான் கேப்டனாக இருக்க வேண்டியது இல்லை. அணியின் வளர்ச்சிக்காக அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து டோனி கேப்டன் பதவியை என்னிடம் வழங்கினார். அதே மனநிலையில்தான் நானும் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

தகுந்த நேரத்தில் முடிவுகள் எடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்வதும் தலைமை பண்பின் குணம் தான். நான் எப்போதுமே எனக்கு கேப்டனாகவே இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News